தேசிய நிர்வாகியாக இல்லையென்றாலும் 20 ஆண்டு பாஜவில் இருந்ததே திருப்தி: எம்பி மேனகா காந்தி பேச்சு

சுல்தான்பூர்: பாஜவின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் பெயர் இல்லையென்றாலும் 20 ஆண்டுகள் பாஜவில் இருந்ததில் திருப்தி அடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். பாஜ தனது தேசிய நிர்வாகிகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மேனகா காந்தி, அவரது மகன் வருண் காந்தி ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை. வருண் காந்தி லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் குறித்து மாநில அரசை விமர்சித்திருந்த நிலையில் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இருந்து எம்பி மேனகா காந்தி மற்றும் வருணின் பெயர் நீக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தனது நாடாளுமன்ற தொகுதிக்கு 2 நாள் பயணமாக வந்திருந்த எம்பி மேனகா காந்தியிடம், பாஜ தேசிய நிர்வாகிகள் பட்டியலில் பெயர் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘‘ 20ஆண்டுகள் பாஜவில் இருந்ததில் திருப்தி அடைகிறேன். தேசிய நிர்வாகிகள் குழுவில் இடம்பெறாததால் ஒருவரது சிறப்பு குறைந்துவிடாது. எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்வதுதான் எனது முதல் பணியாகும்’ என்றார்.

Related Stories: