சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

சின்னாளபட்டி: புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயருக்கு மன்னர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி மேட்டுப்பட்டி பகுதியில் உள்ளது ஸ்ரீஅஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில். 16 அடி உயரத்தில் நின்ற நிலையில் தன்னை வணங்க வரும் பக்தர்களை வணங்குவது போல் ஆஞ்சநேயர் சிலை அமைந்திருப்பது கோயிலின் தனிச்சிறப்பு. இந்தியாவிலேயே 21 வகையான அலங்காரங்களை செய்யும் சிறப்பு இக்கோயிலுக்கு உரியதாகும்.

புரட்டாசி மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்வது வழக்கம். நேற்று முன்தினம் புரட்டாசி 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு 34 கிலோ வெண்னெய் மூலம் ஆஞ்சநேயருக்கு மன்னர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இடுப்பில் உடைவாள், தங்க ஜரிகைகளுடன் கூடிய உடை ஆகியவற்றுடன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். சிறப்பு அலங்காரம் குறித்து கோயில் குருக்கள் பிரத்யுனன் பட்டாட்சாரியார் கூறுகையில், ‘‘அஞ்சலி வரதஆஞ்சநேயரை தரிசிப்போருக்கு அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்.

கண் திருஷ்டி மற்றும் செல்வ செழிப்பிற்காக பக்தர்கள் சுவாமிக்கு வெண்னெய் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். 34 கிலோ வெண்னெய் மூலம் இந்த அலங்காரம் செய்ய 10 மணி நேரம் ஆனது’’ என்றார்.

Related Stories: