கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

கொடைக்கானல் : கொடைக்கானலில் மலைப்பூண்டு ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.கொடைக்கானல் மலை பகுதிகளில் விவசாயமே பிரதான தொழில். இங்கு கேரட், பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு உள்ளிட்டவை அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக மேல்மலை, கீழ் மலை கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வெள்ளைப்பூண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் வெள்ளைப்பூண்டுக்கு மருத்துவ குணம் உள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் விளைவிக்கப்படும் வெள்ளைப்பூண்டு தேனி மாவட்டம் வடுகப்பட்டிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வடுகபட்டியில் இடைத்தரகர்களின் தலையீடு காரணமாக வெள்ளைப் பூண்டுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து கொடைக்கானல் விவசாயிகள் கூறுகையில், வடுகபட்டியில் உள்ள வியாபாரிகள் தாங்கள் வைத்ததுதான் விலை என்கின்ற ரீதியில் விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக வெள்ளைப்பூண்டு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. கொடைக்கானல் மலை வெள்ளைப் பூண்டிற்க்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது . ஆனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெள்ளைப்பூண்டை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக கொடைக்கானல் பகுதியிலேயே சந்தை அமைக்க வேண்டும். குறிப்பாக அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒழுங்கு முறை விற்பனை கூடமும் அமைக்க வேண்டும், என்றனார்.

Related Stories: