உலர் பழங்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட கீரிடம், மாலைகளால் திருமஞ்சனத்தின் போது ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அலங்காரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாள் பெரிய சேஷ வாகனத்திலும் இரண்டாவது நாள் சின்னசேலம் அன்னம் வாகனத்திலும் மூன்றாவது நாளான இன்று சிம்ம வாகனத்தில் காலை எழுந்தருளினார் மதியம் ஏழுமலையான் கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் ஜீயர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் காய்ந்த பேரிச்சம்பழம் , திராட்சை,  பிஸ்தா, பாதம் பருப்பு, ரோஜா இதழ்கள், தாழம்பூ உள்ளிட்ட உலர் பழங்களை கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு மாலை, கீரிடம் தயார் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. மேலும் திருமஞ்சன மண்டபம் பல்வேறு மலர்களை கொண்டு தாமரை போன்று அலங்கரிக்கப்பட்டது அனைவரையும் கவர்ந்தது. இவை அனைத்தும் சென்னையை சேர்ந்த நன்கொடையாளர் த்ரிலோக் சந்தர் வழங்கிய பூக்களை 20 மலர் வடிவமைப்பு நிபுணர்களைக் கொண்டு மூன்று நாட்களில் அலங்கரிக்கப்பட்டதாக தேவஸ்தான தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தெரிவித்தார். இதில் செயல் அதிகாரி ஜவகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: