குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடப்பொருட்கள் தயாரிப்பில் தசரா குழுவினர் தீவிரம்

தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 6ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் 61, 41, 21, 11, 10 நாட்கள் என விரதம் மேற்கொள்வர். வழக்கமாக வேடம் அணியும் பக்தர்கள் கொடியேற்றம் முடிந்ததும் பக்தர்களுக்கு திருக்காப்பு அணிவிக்கப்படும் தொடர்ந்து பக்தர்கள் தனித்தனியே, குழுக்களாகவும் வேடமணிந்து காணிக்கை வசூல் செய்து சூரசம்ஹாரத்தன்று கோயில் உண்டியலில் செலுத்துவர்.

தசரா திருவிழாவவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் ராமன், லெட்சுமணன், சிவன், பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி, காளி, அட்டகாளி, கருங்காளி, சுடுகாட்டுகாளி, குறவன், குறத்தி, என பல்வேறு வேடங்கள் அணிவர். இவ்வாறாக வேடம் அணியும் ஏராளமான தசரா குழுவினர் தங்களுக்குத் தேவையான கீரிடங்கள், மாலைகள் உள்ளிட்ட அலங்கார பொருட்களை செய்து வருகின்றனர். மேலும் குழுக்களில் வேடம் அணியும் பக்தர்கள் அணியும் உடைகள் தயாரிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உடன்குடி சிவலூர் முத்தாரம்மன் தசரா குழுவினர் தற்போது தசரா பறை மற்றும் அங்குள்ள கோயில்களில் வைத்து தசரா வேடப்பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பார்வதி திருக்கோலம்

தசரா திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு கோலங்களில் அம்மன் வீதியுலா நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இன்றி உள்வீதியுலா மட்டுமே நடைபெற்று வருகிறது. 3வது நாளான நேற்று இரவு 8.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் அம்மன் உள்வீதியுலா நடந்தது.

Related Stories: