தர்மபுரி மாவட்டத்தில் வெண்டை விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு-கிலோ ₹12க்கு விற்பனை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் வெண்டை விளைச்சல் அதிகரிப்பால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெண்டை விலை ஒருகிலோ ₹12க்கு நேற்று விற்பனை விற்பனை செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 500 ஏக்கருக்கு மேல் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை அவ்வவ்போது பெய்துவந்ததாலும், சொட்டுநீர் பாசனத்தால் வெண்டை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைக்கு வெண்டை வரத்து அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலத்திற்கு செல்வது குறைந்துள்ளது. இதனால் வெண்டை விலை சரிந்துள்ளது.

தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒருகிலோ வெண்டை ₹12 முதல் ₹14க்கு விற்பனை செய்யப்பட்டது. விளைச்சல் அதிகரிப்பு மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து வாங்க வராததால், விலை சரிந்து காணப்படுகிறது. இதனால் ஒருசில விவசாயிகள் வெண்டை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். மேலும் வெண்டை தோட்டத்திலேயே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சந்தைக்கு வெண்டை வரத்து அதிகரிப்பால், சரியான விலை கிடைக்கவில்லை. கூலிகொடுத்து வெண்டை அறுவடை செய்ய முடியவில்லை. அதனால் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: