மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நியூட்ரி கிளப் தொடக்க விழா

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுத் துறை சார்பில் ஊட்டச்சத்து மாதவிழா மற்றும் நியூட்ரி கிளப் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதன்மை செயல் அலுவலர் விஜயராஜ் தலைமை தாங்கினார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மதன் பெரியசாமி, துணை முதல்வர் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ ஊட்டச்சத்துத் துறை தலைவர் ஷாபியா பானு வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட மாவட்ட அலுவலர் சற்குணா, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதா, சித்த மருத்துவ அதிகாரி வானதி நாச்சியார், வட்டார மருத்துவ அலுவலர் கவிதா, லயன்ஸ் கிளப் மதிபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு, பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பாரம்பரிய உணவு குறித்து பேசினர்.

தேசிய ஊட்டச்சத்து குறித்து நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவுப் பொருள்களும், கொரோனாவை எதிர்க்கும் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் நடத்தப்பட்டது.  அப்போது பாரம்பரிய உணவுவகைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. வளரிளம் பெண்களுக்கான மருத்துவ குணமுடைய செடிகளின் விதைகள் தூவுதல், மரக்கன்று நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியர் காயத்ரி தொகுத்து வழங்கினார். உதவிப் பேராசிரியர் ஷபானா ஆஸ்மி நன்றி கூறினார்.

Related Stories: