காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு: உள்ளாட்சி தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  ஆலப்பாக்கம் முன்னாள் தலைவர் சல்குரு  மகளான  5வது வார்டு மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில், போட்டியிடும் இளம் வேட்பாளர்  எஸ்.மோகனப் பிரியா மற்றும் மேலமையூர் பகுதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில்  போட்டியிடும் பூரணியம்மாள் செல்வம் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில்  வாக்குகள் கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் மேலமையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அகாஷயாநகர், ராமகிருஷ்ணாநகர், சின்ன மேலமையூர் பெரிய மேலமையூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சூறாவளி பிரசாரம் செய்தனர்.

அப்போது பேசிய வளர்மதி ‘‘மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் செல்வி மோகனப்ரியா பொறியியல் படிப்பு முடித்தவர். எளிமையானவர். இளம் வேட்பாளர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடியவர். இதுபோன்ற நல்லவர்களை பதவிக்கு வரவழைத்து உங்களது பிரச்னைகளை நிறைவேற்றி கொள்ளுங்கள். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்து, 5ஆண்டுகளை வீணடித்தது போல் உள்ளாட்சி தேர்தலிலும் அந்த தவறை செய்துவிடாதீர்கள். மக்களாகிய உங்களுக்குதான் நஷ்டம். ஆகவே அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்.’’ என்றார். வேட்பாளர் மோகனப்பிரியா பேசுகையில், ‘‘என்னை வெற்றி பெற செய்தால், மேலமையூர் ஊராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகள் அகற்றி,  தேவைக்கேற்ப புதிய சாலைகளை அமைத்து தருவேன்.

மேலும், தெருவிளக்கு வசதி,  குடிநீர் பிரச்சினை சமுதாயநலக்கூடம் என அனைத்து  கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன். அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில், மக்களின் உரிமைகளை மாவட்ட குழு உறுப்பினர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக பேசி அழுத்தம் கொடுத்து  உடனடி தீர்வு காண்பேன்.’’ என்றார். தனது வாக்குறுதிகளை  முன்வைத்து மக்களின் ஆதரவை வெகுவாக கவர்ந்துள்ள இளம்பெண் வேட்பாளர்  மோகனப்ரியாவிற்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு வழங்கியதோடு, ஆர்த்தி எடுத்து வெற்றி பெற, பொதுமக்கள் வாழ்த்தினர். இந்த பிரசாரத்தில் முன்னாள் சேர்மனும்,  காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளருமான சம்பத்குமார்  கே.சல்குரு,  சங்கர், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: