பிஏபி பாசன திட்டத்தில் ஆழியார் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு 59 ஆண்டுகள் நிறைவு: விவசாயிகள் கொண்டாட்டம்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த இரு மாநில எல்லையில் உள்ள ஆனைமலை குன்றுகளில் உற்பத்தியாகும் தண்ணீர், சிறு சிறு ஆறுகள் வழியாக அரபி கடலில் சென்று கலந்தது.  இந்த தண்ணீர் கடலில் வீணாக கலப்பதை தவிர்க்க, இரு மாநிலங்களின் நீர் பாசன பயன்பாட்டுக்காக ஆராயபெற்றதுதான் பரம்பிக்குளம் மற்றும் ஆழியார் பாசன(பிஏபி) திட்டமாகும்.  இதன்படி,கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வறண்டு காணப்பட்ட காலத்தில், அப்பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், விவசாயம் செழிக்கவும், கேரள அரசின் ஒப்பந்தத்துடன் தமிழ்நாடு அரசால், காமராஜர் ஆட்சி காலத்தில் பரம்பிக்குளம் மற்றும் ஆழியார் பாசன திட்டம் 1958ல் உருவானது. இந்த திட்டத்தின் மூலம் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிபள்ளம், ஆழியார், திருமூர்த்தி மற்றும் உப்பாறு உள்ளிட்ட பல்வேறு அணைகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த அணைகளின் கட்டுமான பணி, இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு, மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் வரை தொடர்ந்து நடைபெற்றது. இத்திட்டத்தை உருவாக்குவதில் பொதுப்பணித்துறை பெறியாளர்களின் பெரும் பங்கு இருந்தது. பிஏபி திட்ட அணைகளை உருவாக்க, கரடுமுரடான கற்கள் மற்றும் உட்புற வேலைகளுக்குக்கும், முகப்பு வேலைக்கும் உளியாலும், சுத்தியலாலும் செதுக்கப்பட்ட சீரான கற்கள்  பயன்படுத்தப்பட்டன.

இந்த அணைகள் கட்டுமான பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பால் உருவாது பிஏபி திட்டம். இத்தகைய சிறப்பு மிக்க, பிஏபி திட்ட அணைகளில், முதற்கட்டமாக பொள்ளாச்சியை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணையின் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, அதிலிருந்து முதன்முறையாக 1962ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் விவசாய  பாசனத்திற்காக(பழைய ஆயக்கட்டு பாசனம்) தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆழியார் அணையின் நீர்மட்டம் மொத்தம் 120 அடியாகும். அணையில் சுமார் 3,864 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இந்த அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட ஊட்டுக்கால்வாய், சேத்துமடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மூலம் சுமார் 44,378 ஏக்கர் விவசாய நிலம் பாசம் பெறுகிறது.

ஆழியார் அணை கட்டுமான பணி நிறைவடைந்த சில ஆண்டுகளுக்கு பிறகே, சோலையார் மற்றும் பரம்பிக்குளம்,  திருமூர்த்தி அணையின் கட்டுமான பணி நிறைவடைந்தது. பிஏபி, திட்டத்தால் கோவை மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்டல் உள்ள சுமார் 4.50லட்சம் ஏக்கர்  விவசாய நிலங்கள் பசனம் பெற்று, அம்மாவட்ட  நகர் மற்றும் கிராம முன்னேற்றத்துக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பரம்பிக்குளம் மற்றும் ஆழியார் பாசன திட்டத்தில் உள்ள அணைகளிலில் முதன் முறையாக ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அத்திட்டம் செயல்பட துவங்கி 59 வயதை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிஏபி அணையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாசனம் பெறுவது விவசாயிகளுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளது. இதனை இன்று விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

Related Stories: