பணியின் போது சுட்டு கொல்லப்பட்டவர் அமெரிக்காவில் தபால் ஆபிசுக்கு சீக்கிய போலீஸ் அதிகாரி பெயர்

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பணியாற்றிய, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் தலிவால். அமெரிக்க காவல்துறை வரலாற்றில், பணியில் இருக்கும் போது தலைப்பாகை, தாடியுடன் சேவையாற்ற அனுமதிக்கப்பட்ட முதல் சீக்கியர் இவர்தான். கடந்த 2019ம் ஆண்டு போக்குவரத்து நிறுத்த பணியில் இருந்தபோது, காரில் வந்த ஒருவரை நிறுத்தியதால் ஏற்பட்ட மோதலில் சுட்டு கொல்லப்பட்டார். அவரை கவுரவிக்கும் வகையில் ஹூஸ்டனில் உள்ள 315, அடில்ஸ் ஹோவெல் ரோடு தபால் அலுவலகத்துக்கு இவருடைய பெயரை சூட்டும் தீர்மானம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான உத்தரவில் அன்றைய அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன்படி, இந்த தபால் நிலைய கட்டிடத்துக்கு நேற்று முன்தினம் நடந்த விழாவில், ‘சந்தீப் சிங் தலிவால் தபால் அலுவலக கட்டிடம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த விழாவில் தலிவாலின் தந்தை பியாரா சிங் தலிவால் பேசுகையில், ``வன்முறையால் எங்கள் குடும்பத்தில் இருந்து மகன் பிரிக்கப்பட்டான். ஆனால், ஹூஸ்டன் மக்களின் அளவற்ற ஆதரவை பெற்றுள்ளோம்,’’ என்றார். 900 பேரில் ஒருவர்: அமெரிக்காவில் 900க்கும் குறைவான தபால் அலுவலகங்களுக்கு மட்டுமே தனிநபர்களின் பெயர் சூட்டப்பட்டு, கவுரவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: