நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை

மாஸ்கோ: நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து புதிய ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை விண்ணில் வீசி ரஷ்யா சோதனை நடத்தியது. வடகொரியாவும், தென்கொரியாவும் ஏவுகணை சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மேற்கு நாடுகளுடன் பதற்றம் அதிகரித்து வரும் நேரத்தில் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகத்துடன் பயணிக்ககூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யாவின் ஆர்க்டிக்கில் உள்ள பேரண்ட்ஸ் கடலில் சிர்கான் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை விண்ணில் வீசி சோதனை நடத்தியது. இந்த சோதனை இலக்கை தாக்கி வெற்றியடைந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘வெல்லமுடியாதது’ என்று பெயரிட்டுள்ளனர்.

Related Stories: