விவசாயிகளை தடிகளால் தாக்குங்கள்.. யாரும் சிறை செல்ல தயங்க வேண்டாம் : ஹரியானா முதல்வர் சர்ச்சை பேச்சு

சண்டிகர் : வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளை தடிகளால் தாக்குங்கள் என்று ஒரு மாநிலத்தின் முதல்வரே தனது கட்சியினருக்கு ஆலோசனை கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆளும் கட்சியின் விவசாய சங்கத்தினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 1000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் பேசிய அவர், வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை தாக்க ஆயுத குழுக்களை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

போராடும் விவசாயிகள் மீது தடிகளை கொண்டு தாக்குதல் என்று கூறியுள்ள அவர், விளைவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாரும் சிறை செல்ல தயங்க வேண்டாம் என்று பாஜகவினரை தூண்டிவிட்ட முதல்வர், தாக்கிவிட்டு 3 அல்லது 6 மாதம் சிறையில் இருந்து தலைவர்களாக வெளியே வருவீர்கள் என்று குறிப்பிட்டார். போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துபவர்களின் பெயர்கள் வரலாற்றில் பொறிக்கப்படும் என்றும் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். பழிக்கு பழி முறையில் தாக்குதல்கள் என்ற ஒரு மாநிலத்தின் முதல்வரே பேசியிருப்பதற்கு அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: