மாவட்ட உறுப்பினருக்கு போட்டியிடும் நான் வெற்றி பெற்றால் கிராமங்களில் ரேஷன் கடை, சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்துவேன்: ராஜா ராமகிருஷ்ணன் வாக்குறுதி

மதுராந்தகம்:செங்கல்பட்டு 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன் என்னை வெற்றி பெறச் செய்தால் ரேஷன்கடை, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்தி தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றி அமைப்பேன் என வாக்குறுதியளித்துள்ளார். செங்கல்பட்டு 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், மதுராந்தகம் 16வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுமித்ரா தேவி ராஜசேகரன் ஆகியோருக்கு ஆதரவாக சென்னை திருவிக நகர் தொகுதி திமுக எம்எல்ஏ தாயகம்கவி  கலந்துகொண்டு வேனில் நின்றபடி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், திமுக கட்சி ஆட்சி அமைத்து நூறு நாட்களிலேயே கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் முன்னிலை மாநிலமாக திகழ்ந்து வருவதை பக்கத்து மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். கொரோனா நிவாரண நிதி ரூ. 4 ஆயிரத்தை தமிழக மக்களுக்கு வழங்கி சொன்னதை செய்வோம் செய்வதை தான் சொல்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழக முதல்வர் திகழ்ந்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணனுக்கு வாக்களித்தால் தமிழக அரசு வழங்குகின்றன சலுகைகளை உடனுக்குடன் பெற்றுத் தருவார். எனவே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார்.

மேலும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன் சிறுநல்லூர், அவுரிமேடு, நேத்தப்பக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அப்பகுதி கிராம மக்களிடையே பேசுகையில், ‘ரேஷன்கடை, சாலை வசதி தெரு விளக்கு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உடனுக்குடன் செய்து தருவேன் என கூறி வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், நிர்வாகிகள் சசிகுமார், ஆர். சங்கர், ஆர். செல்வநிதி ராமகிருஷ்ணன், ஜி.டி.எம். சிகாமணி, எம்.சி.டி.தினேஷ் தயாளன், கார்த்தி, ஜீவா, வைத்தியநாதன், ஆனந்தன், வினோத்குமார், சோழன், பழனி, ராஜன், முனுசாமி, தணிகாசலம், தசரதன், கோபி, தானிவேல், மோனிஷா, கனிமொழி, முருகானந்தம், கதிர்வேல், சுந்தரமூர்த்தி, புஷ்பரஜ், ஏ.ஜி.ஆர்.ராஜசேகர், ரவி, கண்ணன், சத்தியமூர்த்தி, ஜெயராமன், ஜீவா முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: