கூடலூரில் 4 பேரை தாக்கிக் கொன்ற T23 புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு: 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தை அடுத்து அரசு நடவடிக்கை..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகரகுமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். T23 என பெயரிடப்பட்டுள்ள அந்த புலி, 3 மனிதர்களையும், 30க்கும் அதிகமான கால்நடைகளையும் கொன்றது. தொடர்ந்து அச்சுறுத்தி வரும் புலியை சென்னை அருகேயுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து, கடந்த 25-ம் தேதி முதல் அதனை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணிகள் 7ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே நீலகிரி மாவட்டம் மசினகுடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆதிவாசி மாதன் (52) என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார்.

ஏற்கனவே கூடலூரில் 3 பேர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில் 4வதாக ஒருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலியை சுட்டுக்கொல்லக்கோரி 3 மணி நேரத்துக்கும் மேலாக மசினகுடி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகரகுமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கூடலூர் எம்எல்ஏ பொன்ஜெயசீலன் தலைமையில் நடந்த போராட்டத்தை அடுத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: