திருவாடானை அருகே மகளிர் தொழில் தொடங்க கடனுதவி

ராமநாதபுரம் :  திருவாடானை அருகே மகளிர் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் நிதியை கலெக்டர் சந்திரகலா வழங்கினார். தமிழக அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்க பங்களிப்புடன் திருவாடனை வட்டம், காரங்காடு பெண்கள் 25 பேருக்கு சிறுதொழிலை மேம்படுத்தும் விதமாக தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை கலெக்டர் சந்திரகலா வழங்கினார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் செபாஸ்டியன், சவேரியார், அனிதா, ஏஞ்சல் பிரேமா, முரளி கிருஷ்ணன், ரமேஷ், நன்கொடையாளர்கள் அந்தோணி செங்கோல், மேரி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: