நெல்லையில் காவலர்கள் குறை தீர் முகாம்

நெல்லை : நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் போலீசாரின் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைகண்ணனும், மாவட்டத்தில் எஸ்பி மணிவண்ணனும் போலீசாரிடமிருந்து மனுக்கள் பெற்றனர். தமிழகத்தில் ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் பேரிலும் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் மாவட்டம் மற்றும் மாநகரங்களில் போலீசாரின் குறை தீர்க்கும் முகாம்கள் நேற்று துவங்கி (1ம் தேதி) இன்றுடன் நிறைவடைகிறது.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகரத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த காவலர்களின் குறை தீர்க்கும் முகாமிற்கு போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் தலைமை வகித்தார்.

முகாமில் சிறப்பு எஸ்ஐ, ஏட்டுக்கள் மற்றும் காவலர்கள் 75 பேர் பணியிட மாற்றம் உள்ளிட்ட விருப்ப மனு அளித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு உடனே நெல்லை மாநகரத்திற்குள் பணியிடம் மாற்றம் அளித்து உத்தரவிட்டார். முகாமில் போலீஸ் துணை கமிஷனர்கள் சட்டம் ஒழுங்கு டி.பி.சுரேஷ்குமார், குற்றப்பிரிவு சுரேஷ்குமார் உடனிருந்தனர்.

 இதேபோல் நெல்லை மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடந்த காவலர் குறை தீர்க்கும் முகாமிற்கு எஸ்பி மணிவண்ணன் தலைமை வகித்தார். முகாமில் பங்கேற்ற ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் என மொத்தம் 93 பேர் தங்களது குறைகளை மனுவாக எஸ்பியிடம் அளித்தனர். இதையடுத்து பேசிய எஸ்.பி., இவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: