‘புன்னகை மன்னன்’ திரைப்பட பாணியில் மலையில் இருந்து கீழே குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

ராம்நகர்: காதலை பிரித்து திருமணம் செய்து வைத்ததால், புன்னகை மன்னன் பாணியில் கிருஷ்ணகிரியை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி மலை உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் கமல், ரேகா, ரேவதி நடிப்பில் வெளியான படம் புன்னகை மன்னன். இந்த படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இருவரும் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வார்கள்.

அதேபோன்று உண்மையான சம்பவம் தற்போது நடந்துள்ளது. கர்நாடக மாநிலம், கப்பாளம்மா மலை உச்சியில் இருந்து கீழே குதித்து ஒரு ஜோடி தற்கொலை செய்து கொண்டதாக, சாத்தனூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தனா (20) மற்றும் சதீஸ் குமார் (24) என்று தெரியவந்தது. இரண்டு பேரும் பல மாதங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், இரு வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இரண்டு பேரையும் பிரித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இருவருக்கும் வெவ்வேறு நபர்களுடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடித்தவர்கள், அன்பானவர்கள் என்றாலும், இவர்களுக்கு தங்கள் காதலை மறக்க முடியவில்லை. இதனால், இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கை முறித்து விட்டு, காதலனுடன் சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சந்தனா திட்டமிட்டுள்ளார். அதன்படி, இருவரும் யாருக்கும் தெரியாமல் பெங்களூருவை அடுத்த ராம்நகருக்கு ஓடி வந்துள்ளனர். இங்கு கனகப்புராவில் உள்ள கப்பாளம்மா மலைப்பகுதி சென்ற அவர்கள், இருவரும் கை கோர்த்தப்படி உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Related Stories:

>