திமுக இளைஞரணி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-எம்எல்ஏ வழங்கினார்

திருப்பூர் : திருப்பூர் நல்லூர் பகுதி திமுக இளைஞரணி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முத்தனம்பாளையம் பகுதியில் நடந்தது.இந்நிகழ்ச்சியில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ்   வழங்கினார்.

இதில் தெற்கு, வடக்கு மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு. நாகராசன், தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், தெற்கு மாநகர பொறுப்பு குழு உறுப்பினர் நல்லூர் ரவி, நிர்வாகி திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>