வத்திராயிருப்பு அருகே அதிரடி திருமண ஜோடிக்கு காஸ் சிலிண்டர் பரிசு

வத்திராயிருப்பு: ஒன்றிய அரசு காஸ் விலையை தொடர்ந்து உயர்த்துவதை சுட்டிக்காட்டுவது போல வத்திராயிருப்பில் மணமக்களுக்கு நண்பர்கள் காஸ் சிலிண்டர் பரிசளித்தனர். வீட்டு உபயோகத்திற்கான அத்தியாவசிய பொருளான காஸ் விலை ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றிய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது நடுத்தர, ஏழை, எளிய மக்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் காஸ் விலையேற்றத்தை சுட்டிக்காட்டுவது போல, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மகாராஜாபுரத்தில் இப்ராஹிம் ரிஸ்வானா, பர்வீன் தம்பதிக்கு நேற்று நடந்த  திருமணத்தில் அவர்களது நண்பர்கள் காஸ் சிலிண்டரை அன்பளிப்பாக அளித்தனர்.

Related Stories:

>