வண்டுவாஞ்சேரி அடுத்த வெள்ளிகிடங்கில் சாலையை சீரமைக்காததால் விவசாயிகள் அவதி

வேதாரண்யம்,: வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி ஊராட்சி வெள்ளிகிடங்கில் தோட்டக்கலைத்துறை பண்ணைக்கு செல்லும் சாலை 10 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் விவசாயிகள் சிரமத்திக்குள்ளாகி வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி ஊராட்சி வெள்ளிகிடங்கு நால்ரோடு அருகே வண்டுவாஞ்சேரியில் அரசு தோட்டக்கலை துறை பண்ணை 15 ஏக்கரில் அமைந்துள்ளது. பல்வேறு கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை வாங்குவதற்கு தாலுகா முழுவதிலும் இருந்து நாள்தோறும் விவசாயிகள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இந்த தோட்டக்கலைக் துறை பண்ணைக்குசெல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதேபோல் நால்ரோட்டில் இருந்து எக்கல் செல்லும் சாலையில் உள்ள உள்சாலையும் மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்த சாலைகள் போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சென்ற ஆண்டு இந்த சாலைகள் இரண்டும் 23 லட்சம் வீதம் இரண்டு சாலைகளும் டெண்டர் விடப்பட்டு கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டு அப்படியே கிடப்பில் கிடக்கிறது. உடனடியாக இந்த இரு சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: