கொல்லிமலையில் புதிய நீர்மின் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

சேந்தமங்கலம் : கொல்லிமலையில் புதிய நீர்மின் திட்டம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கொல்லிமலையில் ₹338.79 கோடியில் புதிதாக நீர்மின் திட்டம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வளப்பூர் நாடு கிராமப்பகுதிகளில், அய்யாறு ஆற்றின் கிளை ஓடைகளில் குறுக்கே அசக்காடுபட்டி, கோவிலூர், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டிமற்றும் காடம்பள்ளம் ஆகிய 5 இடங்களில் தடுப்புகள் (கலிங்குகள்) அமைத்து, மழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்கப்படுகம். அய்யாறு கிளை நதிகளில் கிடைக்கும் மழைநீரை, இருங்குளிப்பட்டியில் அமைக்கப்படும் கலிங்கில் இருந்து சுரங்கம் மூலமாக ஜல்லிப்பட்டிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து குழாய் மூலம் கொல்லிமலை தெற்கு பகுதியில் உள்ள புளியஞ்சோலை அருகே நீர்மின் நிலையம் அமைத்து 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இந்த நீர்மின் திட்ட பணிக்காக, இருங்குளிப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதை பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, நீர்மின் திட்ட மேற்பார்வை பொறியாளர் ராமச்சந்திரன், செயற்பொறியாளர் பத்மநாபன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சத்தியா, பழங்குடியினர் நலத்துறை திட்ட இயக்குநர் ராமசாமி, தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: