ராஜபாளையத்தில் சமுதாய வளைகாப்பு விழா

ராஜபாளையம் : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா ராஜபாளையத்தில் நடைபெற்றது.

தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் பேசியதாவது:

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்ளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பிரசவகால விடுப்பு அதிகரிப்பு போன்ற திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். இது பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திமுக அரசு எப்போதும் மகளிருக்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என்று கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் பேசியதாவது: கர்ப்பிணி பெண்களை கணவன்மார்கள் மற்றும் குடும்பத்தினர் தனிக்கவனம் செலுத்தி பாதுகாத்திட வேண்டும். ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, ஒன்றிய துணைச்சேர்மன் துரைகற்பகராஜ், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தங்கலட்சுமி, பங்கஜம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மருத்துவர்கள் ஜனனி, லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: