தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது, அரிவாள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் : நள்ளிரவில் காவல்துறை அதிரடி!!

சென்னை : தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் ரவுடிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் A, A+ பிரிவு என 450 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் ரவுடிகளிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்தி விவரம்:

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு ஓரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.இந்த நடவடிக்கையின் மூலம் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 450 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 181 நபர்கள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியானையின் படி கைதானார்கள்;. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் 420 நபர்களிடமிருந்து நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டுள்ளது. கொலை குற்றங்களில் ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.இவ்வாறு, டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>