அக்டோபர் 1ம் தேதி முதல் 702 அரசு ஏசி பேருந்துகள் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே இயக்கம் : அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் 01.10.2021 முதல் இயக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சு.ளு. ராஜகண்ணப்பன் தகவல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழ்நாட்டில் நோய் தொற்றுப் பரவல் குறைந்து வருவதையடுத்து மாண்புமிகு தமிழ¦நாடு முதலமைச்சர் அவர்கள் 10.05.2021 முதல் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே இயக்கப்படாமல் இருந்து வந்த குளிர்சாதன பேருந்துகள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி மீண்டும் இயங்க அனுமதி அளித்துள்ளார்கள். அதன்படி, அக்டோபர் 1ம் தேதி முதல் 702 அரசு ஏசி பேருந்துகள் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படவுள்ளன.  

  பராமரிப்பு பணிகளை செம்மையாக மேற்கொண்டு பேருந்தில் தொற்று பரவா வண்ணம் மருந்துகள் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு 01.10.2021 முதல் இயக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  எனவே, பயணிகள் இந்த பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

அனைத்துப் பேருந்துகளிலும் சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்த பிறகுதான் பயணிகள் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.சானிடைசர் பயணிகளுக்கு நடத்துநர் மூலம் அளிக்க நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு தக்க நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது.  மேற்கண்ட தகவலை மாண்புமிகு தமிழ¦நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சு.ளு. ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>