மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களின் கூட்டம்: இன்று நடைபெறுகிறது

திருவள்ளூர்: மாவட்டத்திலுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக்கம் செய்யவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மாவட்ட ஏற்றுமதி விருத்தி குழு அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள், பொறியியல் பொருட்கள், தானியங்கி வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், ரசாயனப் பொருட்கள், நெகிழி பொருட்கள், பருப்பு, மற்றும் பருப்பு சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வசதியாக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் 2022 ல் நிறைவு பெறுவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மத்திய வர்த்தக அமைச்சகம் வர்த்தக வாரமாக கொண்டாடப்படுகின்றன.

அதன் ஒரு நிகழ்ச்சியாக மாவட்ட ஏற்றுமதி வசதியாக்க குழுவின் ஏற்பாட்டில் இன்று (24ம் தேதி)  காலை 10.30 மணிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து தொழில் வணிக நிறுவனங்களும் கலந்துகொண்டு பயன்பெறுமாறும்,மேலும், தகவல்களுக்கு திருவள்ளுர், காக்களுர், சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை அணுகுமாறு  கலெக்டர்  ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: