அக்டோபர் 21, 25, 28ம் தேதிகளில் புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்

புதுச்சேரி: இதுகுறித்து, புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்து, 108 கிராம பஞ்சாயத்துக்களை உள்ளடங்கிய  1149 பதவிகளுக்கான தேர்தலை 3 கட்டங்களாக அக்டோபர் மாதம் 21, 25, 28 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி  முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 21ம் தேதி மாகே, ஏனாம் நகராட்சி மற்றும் காரைக்கால் நகராட்சிகளுக்கு நடத்தப்படுகிறது. செப். 30ம்தேதி தொடங்கி அக்டோபர் 7ம்தேதி வரை மனுதாக்கல் செய்யலாம்.

இரண்டாம் கட்டமாக அக்டோபர் 25ம் தேதி புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறும். இதற்கு 4ம்தேதி தொடங்கி 11ம்தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். மூன்றாம் கட்டமாக அக்டோபர் 28ம் தேதி  அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர், பாகூர் ஆகிய  5 கொம்யூன் பஞ்சாயத்துக்களில் உள்ள பதவிகளுக்கு 7ம்தேதி முதல் 15ம்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அக்டோபர் 31ம்தேதி ஒரே நேரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>