மதுராந்தகம் நகராட்சியில் மழைநீர் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தீவிரம்

மதுராந்தகம்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் அடைப்பு ஏற்படாமல் இருக்க மாபெரும் மழைநீர் வடிகால்வாய் தூய்மை பணி முகாம்வரும் 25ம் தேதி வரை தொடர்ந்து நடத்த உள்ளதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து, தமிழக அரசின் வழிகாட்டுதல்படி மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் சார்பில், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கிடந்த கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துவங்கியது. முதலில் பார்த்தசாரதி தெருவில், மழைநீர் கால்வாயில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி பணியை தொடங்கினர்.

பின்னர், தேரடி தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள், பிளாஸ்டிக் கழிவுகளாலும், மண் அடைப்பாலும் தண்ணீர் செல்ல முடியாமல் இருந்ததை 15க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தூர்வரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வன்னியர்பேட்டை, ஹாஸ்பிடல் ரோடு ஆகிய தெருக்களில் மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரி சீரமைத்தனர். இந்த பணிகளை நகராட்சி ஆணையர் நாராயணன் பார்வையிட்டார். பொறியாளர் கௌரி, சுகாதார அலுவலர் செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: