உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அனைவரும், கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்று கொண்டனர். தொடர்ந்து, கீழ்கதிர்பூரில் உள்ள தனியார் காஸ் சிலிண்டர் குடோனில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கலெக்டர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் தாமல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்கள் வாக்களிப்பதை பார்வையிட்டார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் சிலிண்டர் நிறுவன பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: