அரக்கோணம் நகராட்சி பகுதியில் மழைநீர், கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி-ஆர்டிஓ ஆய்வு செய்தார்

அரக்கோணம் : அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த அனைத்து வார்டுகளையும் 6 பகுதிகளாகப் பிரிந்து, அங்குள்ள  28.3 கிலோ மீட்டர் கொண்ட மழைநீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணியினை, அரக்கோணம் ஆர்டிஓ சிவதாஸ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆசீர்வாதம், சுகாதார அலுவலர் செந்தில்குமார், இளநிலைப் பொறியாளர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், அரக்கோணம் நகரில் கால்வாய் தூர்வாரும் பணியில்   60 ஊழியர்கள் மற்றும் 3 ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால், பருவமழை, மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு  கால்வாய்களில் உருண்டு ஓடி சென்று விடும். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: