பெண்ணிடம் ஆபாச சைகை

ஆவடி: அம்பத்தூர் கல்யாணபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் யோவான்(45), அயனாவரம் குடிநீர் வாரிய அலுவலகம், வார்டு 49ல் களப்பணியாளர். கடந்த 18ம் தேதி இரவு யோவான் வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அம்பத்தூர் இந்தியன் பேங்க் காலனியிலுள்ள ஒரு வீட்டு முற்றத்தில் ஒரு இளம்பெண் துணிகளை காயப் போட்டு கொண்டிருந்தார். அந்த பெண்ணை பார்த்ததும் யோவான், தனது பைக்கை நிறுத்தி ஆபாச செய்கை காண்பித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டுக்குள் சென்று விட்டார். பின்னர், சிறிதுநேரம் கழித்து மீண்டும் அந்தப்பெண் வெளியே வந்து துணி காயப்போட வந்துள்ளார். அப்போதும் அங்கிருந்த யோவான் மீண்டும் அந்த பெண்ணை நோக்கி ஆபாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பெண் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யோவானை நேற்று முன்தினம் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>