வேளாண் சட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய அரசுக்கு எதிராக 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தற்போது 10 நாள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக  தமிழகம் முழுவதும் திமுக உறுப்பினர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 19 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. புதிய வேளாண் சட்டங்கள், பெகாசஸ் உளவு பெட்ரோல், டீசல் விலை உயர்வு வேலையில்லா திண்டாட்டம் பொதுச்சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது போன்ற ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து 11 கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. தேனாம்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அண்ணா நகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கட்சி தலைமை அலுவலகத்தில் கருப்பு கோடி கட்டப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுமாறு திமுக கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. தாம்பரத்தில் டி.ஆர்.பாலு தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>