புதுடெல்லி: சிறந்த இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்கு இது வழங்கப்படுகிறது. இந்நிலையில், மொழிபெயர்ப்பு பிரிவில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக இந்த விருதை அவர் பெறுகிறார். அதேபோல், இந்தியில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்ததற்காக டி.இ.எஸ்.ராகவனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
