'எனது பிறந்தநாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தியதால் ஒரு அரசியல் கட்சிக்கு காய்ச்சல்'!: காங். கட்சியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி.!!

டெல்லி: தடுப்பூசி செலுத்திக்கொண்டால் காய்ச்சல் ஏற்படும் என மக்கள் கூறும் நிலையில் தனது பிறந்தநாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது ஒரு அரசியல் கட்சிக்கு காய்ச்சலை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. சுகாதாரத்துறை ஊழியர்களுடன் காணொலி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டரை கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது மறக்க முடியாத உணர்வுப்பூர்வமான தருணமாக தனக்கு அமைந்ததாக தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் காய்ச்சல் ஏற்படும் என மக்கள் கூறும் நிலையில் தனது பிறந்தநாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது ஒரு அரசியல் கட்சிக்கு காய்ச்சலை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடினார். இதுகுறித்து மோடி பேசியதாவது, முன்களப் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவரும் இணைந்து இரண்டரை கோடி தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்தும் போது பக்க விளைவாக காய்ச்சல் ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் எனது பிறந்தநாளுக்கு இரண்டரை கோடி தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஒரு அரசியல் கட்சிக்கே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நேற்று ஒரு நொடிக்கு 425 பேர் வீதம் ஒரு மணி நேரத்திற்கு 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இது உலகின் வேறு எந்த நாட்டிலும் நிகழ்த்த முடியாத சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories:

>