உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டத்தில் அவசர காலப் பயன்பாட்டுக்காக கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு

ஜெனீவா: உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் - வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இதில், கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது. கோவாக்சின் தடுப்பூசி 78% செயல் திறன் வாய்ந்தது என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒன்றிய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.  இதனால் கோவாக்சின் தடுப்பூசி பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதவாது, உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டம் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடையப்பெறுகிறது. இக்கூட்டத்தில் அவசர காலப் பயன்பாட்டுக்காக கோவாக்சினுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: