தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் ‘நோ’ ஹைட்ரோ கார்பன் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் உறுதி

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டி: அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்கள், கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தமிழக சுற்றுச்சூழல் துறையிடம் ஒன்றிய அரசு அனுமதி கேட்டபோது தர முடியாது என மறுக்கப்பட்டது. தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

தமிழகம் முழுவதும் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்துக்காக ஏற்கனவே மாநில அளவிலான பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து மாவட்ட அளவிலான குழுக்கள் விரைவில் அமைக்கப்பட்டு திட்டம் செயல்பட தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: