வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: சிமோன் பைல்ஸ் பரபரப்பு வாக்குமூலம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 100க்கும் அதிகமான   வீராங்கனைகள்,   அணி மருத்துவரால்  பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிரபல வீராங்கனை சிமோன் பைல்ஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.கலைநய ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில், அமெரிக்காவுக்கு தங்கங்களை குவித்தவர் சிமோன் பைல்ஸ்(24).  மன அழுத்தம் காரணமாக போட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை என்று டோக்கியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் சிமோன் விலகினார்.இந்நிலையில் சிமோனா,  அலி ரெய்ஸ்மன், மெக்கய்லா மரோனி, மேகி நிகோலஸ் ஆகிய 4 வீராங்கனைகள் நேற்று வாஷிங்டன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

அப்போது அவர்கள், ‘ அணியின் மருத்துவராக இருந்த  லேரி நாசர் என்பவர் 100க்கும் மேற்பட்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்ததாக’ புகார் தெரிவித்தனர். சிமோன் பேசும் போது, ‘லேரி நாசரின் நடவடிக்கை குறித்து 2015ம் ஆண்டே புகார் அளித்தும் ஒலிம்பிக் கமிட்டியும், காவல்துறையும்  மூடி  மறைக்க முயன்றனர்.  அமெரிக்க ஜிம்னாஸ்டிக் சங்கமும் லேரி நாசரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது. எனவே நான் உட்பட பலர் அவரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானோம். அதனால் இப்படி பதிலளிக்கும் நிலையில் கொடுமையான சூழலில் நான் உட்கார்ந்திருக்கிறேன்’ என்று கூறி கண்கலங்கினார்.சிமோன் உள்ளிட்ட வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாருக்காக லேரி நாசர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுப்போன்ற புகாரை சில நாட்களுக்கு முன்பு  சொன்ன,  இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ராவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

Related Stories:

>