தூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி பணி பள்ளத்தில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடியில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது துவக்கப்பட்ட இப்பணிகள், சப்-கான்ட்ராக்ட் அடிப்படையில் பல இடங்களில் நடக்கிறது. இந்த பணிகள் தரமற்றதாக உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியில் தற்போது கழிவுநீர் ஓடை  அமைக்கப்பட்டு வருகிறது. சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டுள்ளது.

இதில் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று சுந்தரவேல்புரம் பகுதியில் பொக்லைன் உதவியுடன் ராட்சத பள்ளம்  தோண்டப்பட்டது. இதில் கவனக்குறைவாக செயல்பட்டதால் அங்குள்ள தனியார்  நிறுவன ஒர்க்‌ஷாப்பின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது.

அப்போது பள்ளத்திற்குள் நின்று மண் அள்ளிக்கொண்டிருந்த ஜார்க்கண்டை சேர்ந்த தொழிலாளிகளானபாஹிராத்(23), அமித்(21) ஆகிய இருவர்  பலியானார்கள்.

Related Stories:

>