வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதேபோல மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனையடுத்து, 18ம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பெய்யும்.

மேலும், 19ம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கட லோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.18ம், 19ம் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: