ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க உயர்மட்டக்குழு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் ஜாமீன், முன்ஜாமீன் கோரிய மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் அனுமதிக்கப்படுகிறது. முன்ஜாமீன் கோரியவர்கள் மீதான வழக்கிற்கு ஏற்ப அபராதத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.  அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதன் மூலம் ெபாது விநியோக திட்டத்திற்கான நோக்கமே வீணாகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், ரேஷனில் தரமான அரசி வழங்குவதை உறுதிப்படுத்திடும் வகையிலும் நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவுத் துறை மற்றும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். இக்குழு அவ்வப்போது அரசுக்கு அறிக்கையளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

Related Stories: