நிர்ணயித்த இலக்கை கடந்து 200 சதவீதத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் காஞ்சிபுரம் மாவட்டம் சாதனை

காஞ்சிபுரம்:  பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நிர்ணயித்த இலக்கை கடந்து 200 சதவீதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மெகா தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் 602 இடங்களில் காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை நடந்தது. இதில் 29,746 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டடது. இதற்காக செவிலியர்களும், தகவல் பதிப்பாளர்களும், பயனாளிகளை அழைத்து வரும் பணியை மருத்துவம், உள்ளாட்சி, சத்துணவு, பள்ளி கல்வித்துறை மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் மேற்கொண்டனர்.

மொகா தடுப்பூசி முகாமில் தமிழக அரசால் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு இலக்கு 29,246 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதையும் கடந்து 200 சதவீதம் எண்ணிக்கையில் 60,040 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

எஸ்பி சுதாகர் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை பார்வையிட்டு பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட காவல்துறை சார்பில் நகரம் மற்றும் கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பல்வேறு இடங்களுக்கும் சென்று தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, தடுப்பூசி குறித்து பொதுமக்களிடமிருந்த அச்சத்தையும், பய்தையும் கலைத்து பொதுமக்களை சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எஸ்பி சுதாகர், பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செவிலிமேடு ஆரம்ப சுகாதார நிலையம், சின்ன காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், பிடிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு நாராயணசாமி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜவகர்லால் நேரு மார்க்கெட், மீன் மார்க்கெட், ஜவகர்லால் தெரு மற்றும் ஓரிக்கை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார்.

Related Stories: