மசோதா நிறைவேற்றம் அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் கைது செய்யப்படுவர்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒரு சட்ட மசோதா தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது: 1959ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின்படி ஆணையரின் எழுத்து வடிவிலான புகார் ஒன்றின் பேரினாலன்றி, சமய நிறுவனம் அல்லது நிலைக்கொடை ஒன்றிக்கு சொந்தமான சொத்து சட்ட விரோதமான உடைமையுடன் தொடர்புடைய குற்றத்தினை நீதிமன்றம் எதுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல் ஆகாது. எனவே சமய நிறுவனத்தின் பொது விவகாரங்களில் ஆர்வம் கொண்டுள்ள எவராலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான குற்றவியல் புகார் தாக்கல் செய்யலாமென கருதப்படுகிறது. எனவே, கூறப்படும் குற்றத்தினை கைது செய்தலுக்குரிய மற்றும் பிணையில் விட தக்கதல்லாததாகவும் மற்றும் இந்த நோக்கத்திற்காக கூறப்பட்ட சட்டத்தின் 79-பி பிரிவினை திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது.

Related Stories: