15ம் தேதி பூந்தமல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் திமுக முப்பெரு விழா: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் காக்களூர் ஆர்.எம்.கெஸ்ட் ஹவுசில் நடைபெற்றது. மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்து பேசினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, சி.ஜெரால்டு, கே.ஜெ.ரமேஷ், காயத்திரி ஸ்ரீதரன், ம.இராஜி, எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், வி.ஜெ.சீனிவாசன், வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், எம்.குமார், ஜி.விமல்வர்சன், ஜெ.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, புஜ்ஜி ராமகிருஷ்ணன், பூவை எம்.ரவிக்குமார், என்.இ.கே.மூர்த்தி, ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்விஜயன், தி.வே.முனுசாமி, தி.வை.ரவி, மாவட்ட அமைப்பாளர்கள் பிரபு கஜேந்திரன், எஸ்.மூர்த்தி, ஏ.ஜெ.பவுல், ஏ.ஜி.ரவி, சங்கீதா சீனிவாசன், ஓ.ஆர்.நாகூர்கனி, ஜெயபுகழேந்தி, டி.டி.தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 15ம் தேதி மாலை 4 மணியளவில் பூந்தமல்லி, சுந்தர் திருமண மண்டபத்தில் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் திமுக முப்பெரு விழாவில் அனைவரும் பங்கேற்பது என்றும், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணுவிற்கு கலைஞர் விருது வழங்கிய திமுக தலைவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தும், ஒன்றிய பாஜக அரசின் வேளாண் தடைச்சட்டம், பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் 20ம் தேதி இல்லங்கள், அலுவலகங்கள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: