பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

சென்னை: பாரதிச் சுடரை ஏற்றி பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டு விழாவை முதல்வர் தொடங்கி வைத்தார். பின்னர் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு,க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்; பல ஆயிரம் சிந்தனைகளை கொண்ட மகாகவியின் எண்ணங்கள், சுதந்திர சிந்தனைகளை கொண்டது. தமிழ் வெறியோடு பாடக்கூடிய பாரதி, இன்னும் தேவைப்படுகிறார். இயேசு கிறிஸ்துவை புகழ்ந்து எழுதி விட்டு ஓம் சக்தி என்று முடிக்கும் சகோதரத்துவ பாரதி இன்றும் தேவைப்படுகிறார்.

குடும்பமாக இருந்தாலும், அரசாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும் எந்த அடக்குமுறையையும் எதிர்த்து கேள்வி கேட்டவர் பாரதி; அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் மற்றும் பாடல் ஒரு போதும் மறையாது. அன்பு அறிவு, கல்வி, நீதி என இந்த நான்கும் கொண்டவர்கள் மேலோர்; மற்றவர்கள் கீழோர் என்பது பாரதியின் கருத்து. பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்; சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் பாரதியாரின் நூல்களுக்கு தனி பிரிவு அமைக்கப்படும்.

ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும்; இது எனது அரசு அல்ல நமது அரசு, பாரதியார் இன்றும் தேவைப்படுகிறார், பாரதி காலத்தின் தேவை. பல ஆயிரம் சிந்தனைகளை கொண்டவர் பாரதி; பாரதியின் கவிதை, பாடல்களை மக்களின் மனதிலிருந்து நீக்க முடியாது, பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை இவ்வாறு கூறினார்.

Related Stories: