வத்திராயிருப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி பகுதியில் தூய்மைப்பணி

வத்திராயிருப்பு: தினகரன் செய்தி எதிரொலியாக, வத்திராயிருப்பு பேரூராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகத்திலிருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டன. வத்திராயிருப்பு பேரூராட்சியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் வளாகத்தைச் சுற்றி கட்டப்பட்ட சுற்றுச்சுவர் கட்டிய சில நாட்களிலேயே இடிந்து விழுந்தது. ஆனாலும், சுற்றுச்சுவரை கட்டாமல் பாதுகாப்பற்ற நிலையில் குடிநீர் தொட்டி இருந்தது.

அத்துடன் குடிநீர் தொட்டி வளாகத்தில் முட்செடிகள் புதர் போல மண்டியிருந்தன. இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மேல்நிலைத் தொட்டி வளாகப் பகுதியில் முட்செடிகள் மற்றும் புதர்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் மேற்பார்வையில் பணியாளர்கள் அகற்றினர். அத்துடன் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: