தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில் இணையவழியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அலுவலர் விஜயராஜ், பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மதன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி, காஞ்சிமா முனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறித்து பேசினார்.

மேலும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த ஆசிரியர்களாகவும், சிறந்த வல்லுநர்களாகவும் உருவாக வேண்டும். பல்வேறு நடப்பியல் நிகழ்வுகளையும், தன்னம்பிக்கையை வளர்க்கும் பல கருத்துகளை கூறி புராண, இலக்கிய கதைகளை சுட்டிக்காட்டினார். ஆசிரியர் தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரியின் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்கள், தங்களின் படைப்புகளை வாசித்து ஆசிரியர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர். நிகழ்ச்சியை, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ரேகா தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Related Stories: