கோவை மாவட்டம் துடியலூர் அருகே 300 கியூப்களில் விநாயகர் உருவம் வரைந்து 8 வயது குழந்தை அசத்தல்

கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் அருகே 300 கியூப்களில் விநாயகர் உருவம் வரைந்து 8 வயது குழந்தை அசத்தியுள்ளார். கோவை துடியலூர் அருகே அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஹன்சிதா (வயது 8). இவர் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

மேலும், தாய் சுபாஷினி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். ஹன்சிதாவிற்கு விநாயகர் கடவுள் மீது பக்தி அதிகம். ஆகவே விநியாகர் சதூர்த்தியை முன்னிட்டு தனது வீட்டில் 300 கியூப்களில் சுமார் 3 மணி நேரம் விநாயகர் உருவம் வரைந்து விழா கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து ஹன்சிதா கூறுகையில், சிறு வயதில் இருந்தே கியூப் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதை வைத்து விநாயகர் உருவம் வரைய வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வந்தது. எனவே விநியாகர் சதூர்த்தை முன்னிட்டு 300 கியூப்களில் விநாயகர் உருவம் வரைந்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்றார். இவரது திறமையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Related Stories: