கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள்: தமிழகத்தில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்.31 வரை தடை நீட்டிப்பு..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவிழா, அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்.31 வரை தடை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

* தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவிழா, அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்.31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

* பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்

* தலைவர்கள் சிலைகளின் மாலை அணிவிக்கும் நிகழ்வில் ஆட்சியர் மட்டுமே பங்கேற்க அனுமதி பெற வேண்டும்.

* தலைவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள், அரசியல் கட்சியினருக்கு அனுமதி அவசியம்.

* செப்டம்பர், அக்டோபர், மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.

* கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளது.

* தமிழகத்தில் 45% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 12% பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

* கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாம் அலையை தடுப்பதற்கு தடுப்பூசியின் பங்கு முக்கியமானது.

* தினமும் சுமார் 3 லட்சம் தடுப்பூசி என்ற அளவை தற்போது 5 லட்சம் என அதிகரித்துள்ளோம்.

* பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய்த் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்

* நிஃபா வைரஸ் தாக்கம் காரணமாக கேரளாவுடனான பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் நிஃபா வைரஸ் தாக்கம் ஏற்படாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அறிக்கை மூலம் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: