டி20 இந்திய அணி ஆலோசகராக டோனி சம்மதம்: பிசிசிஐ செயலாளர் மகிழ்ச்சி

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ்.டோனி சம்மததித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறுகையில், ``நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ். டோனி செயல்படுவார்.  பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ். டோனி சம்மதித்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் டோனி இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவார்.

இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரவிசாஸ்திரி மற்றும் பிற பயிற்சி ஊழியர்களுடன் இணைந்து எம்.எஸ்.டோனி செயல்படுவார். முன்னதாக அவர், ``டோனியை ஆலோசகராக நியமிப்பது தொடர்பாக நான் பிசிசிஐ அமைப்பின் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கேப்டன் கோஹ்லி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, அணி வீரர்கள், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அனைவரிடமும் கருத்துக்களைக் கேட்டேன். டோனியின் பெயரைச் சொன்னவுடனே அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். இதனால்தான் இந்த முடிவை விரைவாக எடுக்க முடிந்தது’ என்றார்.

Related Stories: