வீடூர் அணையில் விடப்பட்ட 2 லட்சம் மீன் குஞ்சுகள்

விக்கிரவாண்டி :  விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையில் 9.60 லட்சம் மதிப்பீட்டில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வீடூர் அணையில் 2021-22ம் ஆண்டிற்கான நீர்த்தேக்கங்களில் மீன் குஞ்சு இருப்பு செய்வது தொடர்பாக 9.60 லட்சம் இலக்கு எழுதிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை 9 மணியளவில் விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தலைமையில் வீடூர் அலுவலகத்துக்கு உட்பட்ட வீடூர் அணையில் 2 லட்சம் மீன் குஞ்சுகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், பொம்பூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர், மீன்வளத்துறை அலுவலர்கள், வீடூர் அணை பங்கு மீனவர்கள் ஆகியோர் முன்னிலையில் வீடூர் அணையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் ஜனார்த்தனம், கடல் முதல்வர் ராமசந்திரன், ஆய்வாளர் சந்திரமணி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: