பழனி முருகன் கோயிலில் 50 நாட்களுக்கு பின் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியது!: உற்சாகமாக பயணிக்கும் பக்தர்கள்..!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் 50 நாட்களுக்கு பிறகு ரோப்கார் சேவை துவங்கப்பட்டிருகிறது. பழனி முருகன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு ஒருமாத காலத்திற்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அச்சமயம் ரோப்காரில் உள்ள இரும்பு கம்பி, மின் மோட்டார்கள் மற்றும் பெட்டிகள் மாற்றக்கூடிய பணியில் ரோப்கார் ஊழியர்கள் ஈடுபடுவர். பழனி முருகன் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் ரோப்கார் சேவையை இயக்கி வருகிறது.

குழந்தைகள், பெரியோர் எளிதாக மலை மீது சென்று சாமி தரிசனம் செய்ய இந்த ரோப்கார் சேவை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை கடந்த 50 நாட்களாகவே நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கோயில் நிர்வாகம் ரோப்கார் சேவையை துவங்கியிருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே ரோப்கார் சேவையை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். 50 நாட்களுக்கு பிறகு தற்போது ரோப்கார் சேவை இயக்கப்படுவதால் பக்தர்கள் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.

Related Stories: